Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தவறி விழுந்த சட்டக்கல்லுாரி மாணவர் பலி; நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்

தவறி விழுந்த சட்டக்கல்லுாரி மாணவர் பலி; நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்

தவறி விழுந்த சட்டக்கல்லுாரி மாணவர் பலி; நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்

தவறி விழுந்த சட்டக்கல்லுாரி மாணவர் பலி; நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்

ADDED : செப் 10, 2025 08:57 AM


Google News
Latest Tamil News
கண்டமங்கலம்; கண்டமங்கலம் அருகே தனியார் குடோன் மேற்கூரைக்கு சிமெண்ட் ஷீட் மாற்றும் பணியில் ஈடுபட்ட சட்டக் கல்லுாரி மாணவர் தவறி விழுந்து இறந்தார்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த வைடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் ஏழுமலை 35; எம்.ஏ., முதுகலை பட்டதாரியான இவர், பெங்களூருவில் உள்ள தனியார் சட்டக் கல்லுாரியில் பி.எல்., இறுதியாண்டு படித்து வந்தார். இவர், விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம், நவமால்காப்பேர் கிராமத்தில் வளவனுாரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., மணிக்கு சொந்தமான குடோனில், நேற்று முன்தினம் மேற்கூரை சிமெண்ட் ஷீட்களை மாற்று பணியில், ஏழுமலை உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மாலை 3:00 மணியளவில் குடோனின் மேற்கூரையில் பணியில் ஈடுபட்டிருந்த ஏழுமலை தவறி விழுந் து படுகாயமடைந்தார். அவரை புதுச்சேரி அரியூர் தனிார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று மாலை ஏழுமலை உயிரிழந்தார்.

கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஏழும லை குடும்பத்திற்கு நிவாரணம் கோரி, அவரது உறவினர்கள் மற்றும் வைடிப்பாக்கம் கிராம மக்கள், கண்டமங்கலம் போலீஸ் நிலையம் எதிரே நான்கு வழிச்சாலையில் நேற்று மதியம் 1:45 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டமங்கலம் இன்ஸ்பெக் டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, ப கல் 2:00 மணிக்கு கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us