ADDED : ஜன 03, 2024 06:23 AM
கடலுார் : கடலுாரில் இந்திய தேசிய தொழிலாளர் பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், புதிய தலைவராக குணசேகரன், துணை தலைவர் மகேஷ், செயலாளர் அரசன், துணை செயலாளர் அலீம்பாட்ஷா, பொருளாளர் தண்டபாணி, ஆலோசகர் வீரப்பன், இணை செயலாளர் விஜயகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.