/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஜன 28, 2024 04:36 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பூந்தோட்டம் காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 23ம் தேதி மாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது.
தொடர்ந்து முதல் கால மற்றும் இரண்டாம் காலயாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:30 மணிக்கு நாடிசந்தானம், சுவாமி மற்றும் விமானத்திற்கு காப்பு கட்டுதல், கோ பூஜை, தனபூஜை நடந்தது.
பின், 8:30 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு காத்தாயி அம்மன் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.