/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சித்தி விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் சித்தி விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
சித்தி விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
சித்தி விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
சித்தி விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : செப் 11, 2025 03:28 AM
கடலுார்: கடலுார் அடுத்த கோண்டூர் சித்தி விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
கடலுார் அடுத்த கோண்டூர் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9ம் தேதி காலை கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடந்தது.
நேற்று விக்னேஸ்வர பூஜை, யாக யாகேஷ்வரர் பூஜை, கும்ப ஆவாஹன பூஜைகள், ருத்ர பாராயணம், ஸ்ரீ சுக்த பாராயணம், மூல மந்த்ர ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி நடந்தது. மாலை தன பூஜை, லலிதாம்பிகை சகஸ்ரநாம பாராயணம், லட்சுமி சகஸ்ரநாம பாராயணம், ஹோமங்கள், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
இன்று காலை 6 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜை, அனுக்ஞை, ரக்ஷாபந்தனம், நான்காம் கால யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் நடக்கிறது. தொடர்ந்து 8.30 மணிக்கு கடம் புறப்பாடாகி, சித்தி விநாயகர் கோபுர மகா கும்பாபிஷேகம், மூலவர் மகா கும் பாபிஷேகம் நடக்கிறது.
மாலை 5 மணிக்கு மூலவர் மகா அபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு மண்டல பூஜைகள் துவங்குகிறது.
விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.