Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கிருத்திகை வழிபாடு

கிருத்திகை வழிபாடு

கிருத்திகை வழிபாடு

கிருத்திகை வழிபாடு

ADDED : ஜன 21, 2024 04:52 AM


Google News
விருத்தாசலம்: தை மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.

மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பருக்கு நேற்று காலை 9:00 மணியளவில் பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து கொளஞ்சியப்பர், சித்தி விநாயகர்சாமிகள் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

அதேபோல், மங்கலம்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது. இதில், ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us