ADDED : மே 11, 2025 01:44 AM

கிள்ளை: கிள்ளை பேரூராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம் நடந்தது.
சேர்மன் மல்லிகா முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணை சேர்மன் கிள்ளை ரவீந்திரன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார்.
தலைமை எழுத்தர் செல்வராஜ் தீர்மானங்கள் வாசித்தார்.
கூட்டத்தில், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.