/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தடகள போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி சாதனை தடகள போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி சாதனை
தடகள போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி சாதனை
தடகள போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி சாதனை
தடகள போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி சாதனை
ADDED : செப் 18, 2025 03:11 AM

மந்தாரக்குப்பம்: மாவட்ட அளவிலான நடந்த தடகள விளையாட்டு போட்டியில் ஜெயப்பிரியா பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மாவட்ட அளவிலான நடந்த தடகளப்போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 100 மீட்டர் ஓட்டத்தில் தனுஸ்ரீ என்ற ஜெயப்பிரியா பள்ளி மாணவி பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
மாநில அளவிலான நடக்கும் விளையாட்டு போட்டிக்கு தேர்வு பெற்ற அவரை ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத் தலைவர் ஜெயசங்கர், இயக்குநர் தினேஷ் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன்,உடற்கல்வி ஆசிரியர் மகேஷ் ஆகியோர் பாராட்டினர்.