/உள்ளூர் செய்திகள்/கடலூர்/திருப்பாதிரிபுலியூரில் ஜெ., பிறந்த நாள் விழாதிருப்பாதிரிபுலியூரில் ஜெ., பிறந்த நாள் விழா
திருப்பாதிரிபுலியூரில் ஜெ., பிறந்த நாள் விழா
திருப்பாதிரிபுலியூரில் ஜெ., பிறந்த நாள் விழா
திருப்பாதிரிபுலியூரில் ஜெ., பிறந்த நாள் விழா
ADDED : பிப் 25, 2024 04:11 AM

கடலுார் : ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் அ.தி.மு.க., மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். முன்னதாக, தேரடி அருகில் ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, கட்சி கொடியேற்றினார்.
மாவட்ட பிரதிநிதி மணி, மாநகராட்சி கவுன்சிலர் வினோத்குமார், வார்டு பிரதிநிதிகள் வைத்தி, மணி, ஆனந்தராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் லட்சுமணன், ஜெயபால், முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.