/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பொதுதேர்விற்கு 'ஹால்டிக்கெட்' வழங்கல்; பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாதபூஜைபொதுதேர்விற்கு 'ஹால்டிக்கெட்' வழங்கல்; பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை
பொதுதேர்விற்கு 'ஹால்டிக்கெட்' வழங்கல்; பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை
பொதுதேர்விற்கு 'ஹால்டிக்கெட்' வழங்கல்; பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை
பொதுதேர்விற்கு 'ஹால்டிக்கெட்' வழங்கல்; பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை
ADDED : பிப் 24, 2024 06:14 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 'ஹால்டிக்கெட்' வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்தனர்.
விழாவிற்கு, விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் வெங்கிடுசாமி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஞானமூர்த்தி, பேரூராட்சி துணை சேர்மன் குமரவேல் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
இதில், வார்டு கவுன்சிலர் அஷ்டலட்சுமி முத்துக்கிருஷணன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பத்ரு, டாக்டர் மணிமேகலை, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மயில்வாகனன், கண்ணன், வீரப்பன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், மாணவர்களின் ஹால்டிக்கெட்டுகளை செல்வ விநாயகர் கோவிலில் வைத்து பூஜை செய்து, மாணவர்களை கோவிலில் இருந்து மேளதாளத்துடன் ஆசிரியர்கள் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவேன் என உறுதிமொழி எடுத்தனர்.
தொடர்ந்து, மாணவர்கள் பெற்றோர்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு மரியாதை செலுத்தினர். முதுகலை ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.