/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தமிழக வரலாற்றை மறைக்க மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி தமிழக வரலாற்றை மறைக்க மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி
தமிழக வரலாற்றை மறைக்க மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி
தமிழக வரலாற்றை மறைக்க மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி
தமிழக வரலாற்றை மறைக்க மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி
ADDED : ஜூலை 03, 2025 08:14 AM
கடலுார் : 'தமிழக வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக மக்களை ஒன்றிணைத்திட 'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். கிராமம், நகரம் என பூத் வாரியாக உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்படும்.
தமிழர்கள் கடந்த 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் நாம் கண்டுபிடித்து தமிழகத்தின் வரலாற்றை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தக் கூடாது என்கிற உணர்வில் மத்திய அரசு சூழ்ச்சி செய்து வருகிறது.
மத்திய அரசுடன் இங்குள்ள எதிர்கட்சிகள் சேர்ந்து துாபம் போடுகின்றன. நாங்கள் மண், மொழி, மானம் காப்பாற்றிட செய்தியாளர்கள் மூலமாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
கடலுார் மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று தமிழ் குடும்பங்களை இணைக்கின்ற விதமாகவும், அதை ஏற்றுக்கொள்கிறபோது அடுத்த கட்டமாக தி.மு.க.,வை இணைக்கும் விதமாகவும் செயல்படுத்தப்படும்.
இதுவரை பல கட்சிகள் ஆண்டு கொண்டிருந்தன. இதுவரை யாரும் தனி நபருக்கு செய்ததில்லை. எடுத்துக்காட்டாக மகளிர் உரிமைத்திட்டம் ஏராளமான பெண்கள் பயனடைந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் மாதம் 1000 ரூபாய் பெறுகின்றனர்.
விடியல் பயணம் மூலமாக இலவச பஸ் பயணம். காலை உணவு திட்டத்தில் 60 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். இதெல்லாம் கடந்த ஆட்சியாளர்கள் செய்யாத சாதனையை செய்துள்ளோம்.
அதே போன்று, இல்லம் தேடிக் கல்வி என்கிற திட்டத்தில் 2 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இந்த சாதனைகளையெல்லாம் பொதுமக்களிடத்தில் சுட்டிக்காட்டி ஏற்றுக்கொண்டால் அவர்களை தி.மு.க.,வில் இணைக்கிறோம்.
ஓரணியில் உறுப்பினர் சேர்க்கும் பணியை நாங்கள் தீவிரமாக செய்வோம். நாம் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பல்வேறு வரிகளை வசூல் செய்து கொடுக்கிறோம். ஆனால் பலன் பெறுவர்கள் வேறு மாநிலம். ஆந்திராவுக்கு ஒரு நீதி, தமிழகத்திற்கு ஒரு நீதியாக உள்ளது.
வேளாண் துறையில் வெளிநாடுகளில் கையாளப்படும் நவீன யுத்திகளை தமிழகத்தில் புகுத்துவது தொடர்பாக முயற்சி மேற்கொள்ளப்படும்.
வரும் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கடலுார் மாவட்டம் வருகை தருகிறார். இந்திய மனித உரிமைக்கட்சி நிறுவனர் இளையபெருமாள் மணி மண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.
அய்யப்பன் எம்.எல்.ஏ., துரை சரவணன் உடனிருந்தனர்.