/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் சர்வதேச யோகா தினம் ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் சர்வதேச யோகா தினம்
ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் சர்வதேச யோகா தினம்
ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் சர்வதேச யோகா தினம்
ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் சர்வதேச யோகா தினம்
ADDED : ஜூன் 22, 2025 12:49 AM

கடலுார் : கடலுார் ஏ.ஆர்.எல்.எம்.,வித்யாலயா பள்ளியில், 'பூமிக்கு யோகா ஒரு ஆரோக்கியம்' என்ற தலைப்பில் சர்வதேச யோகா தின விழா நடந்தது.
பள்ளியின் கவுரவ பொருளாளர் அருளப்பன் தலைமை தாங்கினார். மாணவர்கள் வழிபாட்டு பாடல் பாடி, வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து யோகா தொடர்பான உரைகள், யோகா செயல்பாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினர். சுவரொட்டிபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.