/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தேர்தலுக்கு 'பல்ஸ்' பார்க்கும் தி.மு.க., மாவட்டத்தில் உளவுத்துறை சர்வே தேர்தலுக்கு 'பல்ஸ்' பார்க்கும் தி.மு.க., மாவட்டத்தில் உளவுத்துறை சர்வே
தேர்தலுக்கு 'பல்ஸ்' பார்க்கும் தி.மு.க., மாவட்டத்தில் உளவுத்துறை சர்வே
தேர்தலுக்கு 'பல்ஸ்' பார்க்கும் தி.மு.க., மாவட்டத்தில் உளவுத்துறை சர்வே
தேர்தலுக்கு 'பல்ஸ்' பார்க்கும் தி.மு.க., மாவட்டத்தில் உளவுத்துறை சர்வே
ADDED : மார் 26, 2025 05:34 AM
தமிழகத்தில் ஆளும் கட்சியின் பதவிக்காலம் வரும் 2026ல் முடிவடைகிறது. 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ஆளும்கட்சி பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, உளவுத்துறை போலீஸ் அதிகாரிகள் மூலம் பொதுமக்களிடையே பல்ஸ் பார்த்து வருகிறது.
அதற்காக, 9 கேள்விகள் அடங்கிய பட்டியல் மாநிலம் முழுவதும் உளவுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள கேள்விகளுக்கு பதில்களை உடனுக்குடன் அனுப்புமாறு ஆளும்கட்சி அறிவுறுத்தியுள்ளது. அதில், தற்போதைய தி.மு.க., அரசின் செயல்பாடு எப்படி உள்ளது, அடுத்தடுத்து, இந்த ஆட்சியில் அரசு திட்டங்களால் பயனடைந்துள்ளீர்களா, உங்கள் பகுதியில் தீர்க்கப்படாத 3 பிரச்னைகள், அதில், சாலை, குடிநீர், அரசு அலுவலகங்களில் லஞ்சம் உட்பட 15 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 4வது கேள்வியாக தற்போது தேர்தல் நடந்தால் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
இதனை, உளவுத்துறை போலீசார், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களிடம் கேட்டு வருகின்றனர். ஆனால் பொதுமக்களோ, போலீசாரிடம் அதையும் வெளிப்படையாக பேச, அச்சத்துடன் எங்களுக்கு எதுவும் தெரியாதுங்க என நழுவி விடுகின்றனர்.
உளவுத்துறை போலீசார், தெரியாத மக்களிடம் இடத்திற்கேற்ப, வயதுக்கேற்ப கல்லுாரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என மழுப்பி மக்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.
இருந்தாலும், மக்கள் சரியாக சொன்னால் தான் ஆளும் கட்சிக்கு பதில் சொல்ல முடியும். மக்கள் மழுப்பினால் எப்படி கருத்துகளை சரியாக கூற முடியும் என புலம்பி வருகின்றனர்.