/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்
ADDED : ஜன 11, 2024 04:24 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-24 ம் ஆண்டிற்கான கரும்பு அரவையை, அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
விழாவிற்கு, கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். ஆலை மேலாண் இயக்குனர் சதீஷ், சிதம்பரம் சப் கலெக்டர் ராக்ஷிராணி, சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., ஆலை தலைமை பொறியாளர் பிரபாகரன், ஒன்றிய சேர்மன் கனிமொழி தேவதாஸ்படையாண்டவர், பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன் முன்னிலை வகித்தனர்.
தலைமை கரும்பு அலுவலர் ரவிக்கிருஷ்ணன் வரவேற்றார். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கரும்பு அரவையை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த காலங்களில், 30 கோடி ரூபாய் கடனில் ஆலை இயங்கி வந்தது. விவசாயிகளை ஊக்குவித்து கரும்பு பயிரிட்டு சர்க்கரை கட்டுமானம் உயர புதிய கெமிக்கல் லேப் ஆகியன அமைத்து கடனில்லாமல் ஆலை இயங்க வழிவகுக்கப்பட்டது.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 103 கோடி ரூபாயில் கூட்டுமின் உற்பத்தி தொழிற்சாலை அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு, தற்போது, பணி முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆலைக்கு ஆண்டிற்கு 60 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் வகையில் கூட்டுமின் உற்பத்தி தொழிற்சாலையை, முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார். ஆலை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து புரோக்கர் மூலம் கரும்பு கொள்முதல் செய்து வேறு ஆலைகளுக்கு எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விழாவில் தி.மு.க, ஒன்றிய செயலாளர் மதியழகன், அரசு தரப்பு வழக்கறிஞர் பழனிமனோகரன், கரும்பு விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் தங்க ஆனந்தன், பொருளாளர் மதியழகன்,
விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள், ஆலைதொழிலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.