Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு பள்ளிகளில் தேர்ச்சி அதிகரிப்பு

அரசு பள்ளிகளில் தேர்ச்சி அதிகரிப்பு

அரசு பள்ளிகளில் தேர்ச்சி அதிகரிப்பு

அரசு பள்ளிகளில் தேர்ச்சி அதிகரிப்பு

ADDED : மே 10, 2025 12:31 AM


Google News
புதுச்சத்திரம்: ஆண்டார்முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம், கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

ஆண்டார்முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 135 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 132 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 97.07 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 3.05 சதவீத அதிக தேர்ச்சியாகும். பிரசிலா 534 மதிப்பெண் பெற்று முதலிடம், 510 மதிப்பெண் பெற்று ஷீமா இரண்டாமிடம், தேன்மொழி 501 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

தீர்த்தனகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில், 72 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 70 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 97.02 ஆகும். இது கடந்தாண்டைவிட 4.02 சதவீத அதிக தேர்ச்சியாகும்.

தனம் 547 மதிப்பெண் பெற்று முதலிடம், காயத்ரி 523 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மோனல் 486 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us