நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் திறப்பு விழா
நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் திறப்பு விழா
நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் திறப்பு விழா
ADDED : பிப் 11, 2024 10:51 PM

கடலுார்: கடலுார், மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் அன்டு பேக்கரி திறப்பு விழா நடந்தது.
வேலுார் சாந்தி ஸ்வீட்ஸ் உரிமையாளர் பெருமாள் தலைமை தாங்கினார். உரிமையாளர்கள் வெங்கடேஷ், திருப்பதி வரவேற்றனர். புதுச்சேரி சாந்தி ஸ்வீட்ஸ் வித்யாசாகர், இன்ஜினியர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் ஓட்டல் ஆனந்தபவன் உரிமையாளர் நாராயணன் கடையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
விழாவில், பாலாஜி லேப் உரிமையாளர் ராமலிங்கம், கவுன்சிலர்கள் ராஜாமோகன், அருள்பாபு மற்றும் துரைபிரபு, ராம்குமார், லெனின், மயிலாடுதுறை ஜெனிபர் பேக்கரி செபஸ்டின், டாக்டர்கள் வினோத், மாரியப்பன், இளமாறன், ஜீவிதா கார்த்திகேயன், ஈஸ்வர் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் இன்ஜினியர்கள் கார்த்திகேயன், தினேஷ், வியாபாரிகள், தொழிலதிபர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து உரிமையாளர்கள் வெங்கடேஷ், திருப்பதி கூறுகையில், 'வீட்டு நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து வகை இனிப்பு, கார வகைகள் பாரம்பரிய முறையில் தயார் செய்து விற்பனை செய்கிறோம்.
பிறந்த நாள், திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ட்ரீம் கேக், ஃபயர் பேப்பர் கேக், உள்ளிட்ட அனைத்து வகை கேக் செய்து தருகிறோம்' என்றனர்.
புதுச்சேரி நெல்லை ஸ்வீட்ஸ் வெங்கட் நன்றி கூறினார்.