ADDED : மே 12, 2025 12:23 AM
விருத்தாசலம்,: மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த மு.பட்டி குடிகாட்டைச் சேர்ந்தவர் செல்வக்குமார், 38; இவரது மனைவி ரஞ்சனி, 31; இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, குழந்தை இல்லை.
இந்நிலையில், ரஞ்சனியை அவரது வீட்டில் இருந்து நகை, பணம் வாங்கி வருமாறு கூறி செல்வக்குமார் அடிக்கடி தகராறு செய்தார்.
கடந்த 3ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, ஆத்திரமடைந்த செல்வக்குமார், ஆபாசமாக திட்டி, ரஞ்சனியை கட்டையால் தாக்கினார்.
இது குறித்து ரஞ்சனி அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, செல்வக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.