/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வறுமையில் வாடிய ஆசிரியைக்கு வீடு; முன்னாள் மாணவர்கள் அசத்தல் வறுமையில் வாடிய ஆசிரியைக்கு வீடு; முன்னாள் மாணவர்கள் அசத்தல்
வறுமையில் வாடிய ஆசிரியைக்கு வீடு; முன்னாள் மாணவர்கள் அசத்தல்
வறுமையில் வாடிய ஆசிரியைக்கு வீடு; முன்னாள் மாணவர்கள் அசத்தல்
வறுமையில் வாடிய ஆசிரியைக்கு வீடு; முன்னாள் மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜூன் 14, 2025 02:41 AM

புவனகிரி: புவனகிரியில் வறுமையில் வாடிய ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியைக்கு, முன்னாள் மாணவர்கள் புதிய வீடு வழங்கினர்.
கடலுார் மாவட்டம், புவனகிரி, கவரப்பாளையம் தெருவை சேர்ந்தவர் சந்திரா,75; கணவர் மற்றும் குழந்தைகள் இல்லை. புவனகிரி பெருமாத்துாரில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய போது, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்து, நன்மதிப்பை பெற்றார்.
இந்நிலையில், வறுமை காரணமாக அடிப்படை வசதிகள் இன்றி குடிசை வீட்டில் வசித்தார். இதையறிந்த புவனகிரியைச் சேர்ந்த முன்னாள் மாணவர் மணிகண்டன், சக முன்னாள் மாணவர்கள் உதவியுடன் 3.50 லட்சம் ரூபாய் நிதி திரட்டினார்.
இதையடுத்து ஆசிரியை சந்திராவிற்கு சொந்தமான குடிசை வீட்டை அகற்றி சிமெண்ட் சிலாப் மூலமாக சுற்றுச்சுவர் எழுப்பி, ஆஸ்பெட்டாஸ் ஷீட் மூலமாக மேற்கூரை அமைக்கப்பட்டது. புதிய வீட்டிற்கான சாவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
முன்னாள் மாணவர்கள் ராபர்ட், பிரேம் ஆனந்த், பாலசுப்ரமணியன், ஞானவேல், கார்த்திகேயன், செந்தில்,முருகதாஸ், தீபா, ஸ்ரீதேவி, சுகந்தி ஆகியோர் முன்னிலையில் சீர்வரிசை பொருட்களுடன் மணிகண்டன் சாவியை வழங்கினார்.
முன்னாள் மாணவர்கள் பாலமுருகன், வெங்கடேசன், முரளிதரன், இளம்பரிதி, சதீஷ், அறிவழகன், ராஜா, ஜெயராஜ், வெற்றிச்செல்வன் உடனிருந்தனர். சிறுவயதில் பாடம் கற்பித்த ஆசிரியையின் ஏழ்மை நிலையை அறிந்து வீடு கட்டிக் கொடுத்த முன்னாள் மாணவர்களின் செயல்பாடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.