/உள்ளூர் செய்திகள்/கடலூர்/துணை ஜனாதிபதி வருகையையொட்டி ெஹலிகாப்டர் ஒத்திகைதுணை ஜனாதிபதி வருகையையொட்டி ெஹலிகாப்டர் ஒத்திகை
துணை ஜனாதிபதி வருகையையொட்டி ெஹலிகாப்டர் ஒத்திகை
துணை ஜனாதிபதி வருகையையொட்டி ெஹலிகாப்டர் ஒத்திகை
துணை ஜனாதிபதி வருகையையொட்டி ெஹலிகாப்டர் ஒத்திகை
ADDED : ஜன 28, 2024 06:16 AM
சிதம்பரம், : சிதம்பரத்திற்கு நாளை துணை ஜனாதிபதி வருகையையொட்டி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ெஹலிகாப்டர் இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், புவனகிரிக்கு நாளை (29ம் தேதி) துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வருகை தர உள்ளார்.
ஹெலிகாப்டர் மூலம், காலை 8:00 மணியளவில், சிதம்பரம் அண்ணாமலை பல்ககைழக ெஹலிபேடில் வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து கார் மூலம், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின், பரங்கிப்பேட்டையில் உள்ள பாபாஜி கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். அதையடுத்து, புவனகிரியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, சிதம்பரத்தில் இருந்து ெஹலிகாட்டர் மூலம் டில்லி திரும்புகிறார்.
துணை ஜனாதிபதி வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, எஸ்.பி., ராஜாராம் தலைமையில், டில்லி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
மேலும், துணை ஜனாதிபதி வருகை முன்னோட்டமாக நேற்று மாலை 2 ெஹலிகாப்டர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லுாரி ஹெலிபேடு தளத்தில் இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டன.