/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு பெண்ணாடம் விவசாயிகள் கவலைஅறுவடை இயந்திரம் தட்டுப்பாடு பெண்ணாடம் விவசாயிகள் கவலை
அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு பெண்ணாடம் விவசாயிகள் கவலை
அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு பெண்ணாடம் விவசாயிகள் கவலை
அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு பெண்ணாடம் விவசாயிகள் கவலை
ADDED : ஜன 29, 2024 06:38 AM
பெண்ணாடம் : பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், பெ.பூவனுார், மாளிகைக்கோட்டம், அரியராவி, ஓ.கீரனுார், தாழநல்லுார், தீவளூர், வடகரை, நந்திமங்கலம், செம்பேரி, சவுந்திரசோழபுரம் உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் முன்பட்ட சம்பா பருவத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்திருந்தனர். கடந்த 3 வாரங்களாக அறுவடை பணிகள் நடந்து வருகிறது.
ஆனால் நெல் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு உள்ளதால் அறுவடை பணிகள் துவங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அரியராவி கிராம விவசாயிகள் கூறுகையில், 'நெற்கதிர்கள் முதிர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் அறுவடை இயந்திரங்கள் இப்பகுதியில் குறைந்த அளவில் இருப்பதால் பணிகளை முடிக்க முடியாமல் உள்ளோம்.
நெல் அறுவடை இயந்திர வாடகையும் வாகனங்களுக்கு தகுந்தாற்போல், மணிக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்கின்றனர். அறுவடை பணிகள் தாமதமாவதால் நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து வருகிறது. திடீரென மழை பெய்தால் அறுவடை பணிகள் பாதிப்பதுடன், நெல் வீணாகும் அபாயம் உள்ளதால் கவலையில் உள்ளோம்' என்றனர்.