/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆஞ்சநேயர் கோவிலில் 11ல் அனுமன் ஜெயந்திஆஞ்சநேயர் கோவிலில் 11ல் அனுமன் ஜெயந்தி
ஆஞ்சநேயர் கோவிலில் 11ல் அனுமன் ஜெயந்தி
ஆஞ்சநேயர் கோவிலில் 11ல் அனுமன் ஜெயந்தி
ஆஞ்சநேயர் கோவிலில் 11ல் அனுமன் ஜெயந்தி
ADDED : ஜன 07, 2024 05:37 AM
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வரும் 11ம் தேதி நடக்கிறது.
அதையொட்டி, அன்று காலை 8:30 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், 12:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.
ஏற்பாடுகளை உபயதாரர் ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ், கோவில் தக்கார் சரவணரூபன், செயல் அலுவலர் ஞானசுந்தரம், அர்ச்சகர் தேவநாதன் செய்து வருகின்றனர்.
இதேப் போன்று புதுப்பாளையம் ராஜகோபால சாமி கோவிலில் உள்ள சாந்த ஆஞ்சநேயருக்கும் அன்று காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடக்கிறது.