மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்
ADDED : மார் 21, 2025 06:09 AM

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.
தனியார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமில், சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார் தலைமை தாங்கினார். முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் தாசில்தார் சிவக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முகமது அசேன், கல்விக்குழு தலைவர் முத்துசாமி, பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி மற்றும் டாக்டர்கள், வி.ஏ.ஓ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று மனுக்கள் கொடுத்தனர்.