/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தடுப்புக் காவலில் கஞ்சா வியாபாரி கைதுதடுப்புக் காவலில் கஞ்சா வியாபாரி கைது
தடுப்புக் காவலில் கஞ்சா வியாபாரி கைது
தடுப்புக் காவலில் கஞ்சா வியாபாரி கைது
தடுப்புக் காவலில் கஞ்சா வியாபாரி கைது
ADDED : ஜன 06, 2024 06:42 AM

கடலுார் : கஞ்சா வியாபாரி தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.
கடலுார அடுத்த எம்.புதுாரை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் சிவாஜி,18; இவர், கடந்த அக்டோபர் 28ம் தேதி கஞ்சா விற்றபோது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்றது, பொது இடத்தில் தகராறு செய்தது தொடர்பாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அதனையொட்டி, இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை தடுப்பு காவலில் கைது செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவாஜியிடம் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று வழங்கினர்.