/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காந்தி ஜெயந்தி விழா : இறையன்பு பங்கேற்பு காந்தி ஜெயந்தி விழா : இறையன்பு பங்கேற்பு
காந்தி ஜெயந்தி விழா : இறையன்பு பங்கேற்பு
காந்தி ஜெயந்தி விழா : இறையன்பு பங்கேற்பு
காந்தி ஜெயந்தி விழா : இறையன்பு பங்கேற்பு
ADDED : அக் 03, 2025 01:41 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் காந்தி மன்றம் சார்பில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பங்கேற்றார்.
சிதம்பரம் காமராஜ் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு காந்தி மன்றத் தலைவர் ஞானம் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் கஸ்துாரி லட்சுமிகாந்தன், நடராஜன் முன்னிலை வகித்தனர். ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் தமிழக முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், காமராஜ் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பேசினார்.
காந்தி மன்ற செயலாளர் ஜானகிராமன், பள்ளி முதல்வர் சக்தி, ஷண்முகசுந்தரம், நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். துணை செயலாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார். முன்னதாக, மாணவர்கள் பங்கேற்ற சர்வ சமயப் பிரார்த்தனை நடந்தது.


