ADDED : ஜன 04, 2024 04:05 AM

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலூர்-விருத்தாசலம் நெடுஞ்சாலையில், தினசரி ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிகம். இச்சாலையில், குள்ளஞ்சாவடி அருகே தோப்புக்கொல்லை பேருந்து நிறுத்தம் அருகில், பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழையில் ஜல்லிகள் பெயர்ந்து, பள்ளம் பெரியதாகி உள்ளது. இதில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். நெடுஞ்சாலையை பராமரிக்கும் அதிகாரிகள், குறிப்பிட்ட இடத்தில் செப்பனிட்டு விபத்து அபாயம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.