/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பழங்குடி மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சிபழங்குடி மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
பழங்குடி மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
பழங்குடி மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
பழங்குடி மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
ADDED : பிப் 25, 2024 04:06 AM
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் பழங்குடி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளுக்கான மூன்று மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி துவக்க விழா நடந்தது.
பல்கலைக்கழக கம்ப்யூட்டர் மற்றும் தகவல் அறிவியல் துறை, தமிழக பழங்குடியினர் நலத்துறை இணைந்து, இந்தியா சியாட்டில் குழு அமெரிக்கா உதவியுடன் பழங்குடி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளுக்கான மூன்று மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நடத்துகிறது.
பல்கலையில் நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு துறைத் தலைவர் புவியரசன் வரவேற்றார். அறிவியல் புல முதல்வர் ராக்கப்பன் தொடக்க உரையாற்றினார். கலைப்புல முதல்வர் விஜய ராணி சிறப்புரையாற்றினார்.
ஐக்யூ.ஏ.சி., துணை இயக்குனர் ரமேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
திட்ட முதன்மை ஆய்வாளர் ஜெயபிரகாஷ், பயிற்சி முக்கியத்துவம் குறித்து பேசினார். அமைப்பு செயலாளர்கள் பிரவீனா, சாய்லீலா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.