ADDED : ஜன 28, 2024 04:35 AM
சிதம்பரம் ; சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா மற்றும் குடியரசு தின விழா நடந்தது.
விழாவில், தலைமை ஆசிரியர் முத்துகருப்பன் வரவேற்றார்.
சிதம்பரம் நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தேசியக்கொடியேற்றி மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். முதுகலை வரலாறு ஆசிரியர் ராஜசேகரன் வாழ்த்திப் பேசினார்.
ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
உதவி தலைமையாசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார்.