/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.4.25 கோடியில் கட்டடம் அரசு கல்லுாரியில் அடிக்கல் ரூ.4.25 கோடியில் கட்டடம் அரசு கல்லுாரியில் அடிக்கல்
ரூ.4.25 கோடியில் கட்டடம் அரசு கல்லுாரியில் அடிக்கல்
ரூ.4.25 கோடியில் கட்டடம் அரசு கல்லுாரியில் அடிக்கல்
ரூ.4.25 கோடியில் கட்டடம் அரசு கல்லுாரியில் அடிக்கல்
ADDED : மே 21, 2025 03:08 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், ரூ.4.25 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், 4.25 கோடி ரூபாய் மதிப்பில், 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகம், 2 கழிவறை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதனை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
இதனையொட்டி கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவில், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், கல்லுாரி முதல்வர் முனியன், வரலாற்று துறை தலைவர் சுரேஷ், பேராசியர்கள் கருணாநிதி, பரமசிவம், ெஹலன் ரூத் ஜாய்ஸ், ஆனந்தன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.