/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உதவி பேராசிரியர் மீது முன்னாள் மாணவி புகார் உதவி பேராசிரியர் மீது முன்னாள் மாணவி புகார்
உதவி பேராசிரியர் மீது முன்னாள் மாணவி புகார்
உதவி பேராசிரியர் மீது முன்னாள் மாணவி புகார்
உதவி பேராசிரியர் மீது முன்னாள் மாணவி புகார்
ADDED : மே 31, 2025 05:33 AM
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர், முன்னாள் மாணவியை ஆபாச வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாக அளித்த புகாரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 27வயது பெண் ஒருவர், 2018ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தார். அப்போது அதே கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணியாற்றிய ராஜா என்பவர், மாணவியுடன் நெருங்கிப்பழகி, அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தற்போது மிரட்டுவதாக மாணவி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.