ADDED : மே 13, 2025 07:18 AM

கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் முன்னாள் முதல்வர் பழனிசாமி 71வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கடலுார் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சம்பத் தலைமை தாங்கி, 1,000 பேருக்கு அன்னதானம் மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்.
மாவட்ட அவைத் தலைவர் குமார் முன்னிலை வகித்தார். விழாவில், மாநில மீனவரணி தங்கமணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், கந்தன், வினோத்ராஜ், முன்னாள் ஒன்றிய சேர்மன் பக்கிரி, வர்த்தக பிரிவு வரதராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பகுதி செயலாளர் மாதவன் செய்திருந்தார்.