Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வெள்ள அபாயம்: கலெக்டர் எச்சரிக்கை

வெள்ள அபாயம்: கலெக்டர் எச்சரிக்கை

வெள்ள அபாயம்: கலெக்டர் எச்சரிக்கை

வெள்ள அபாயம்: கலெக்டர் எச்சரிக்கை

ADDED : ஜூன் 29, 2025 07:01 AM


Google News
கடலுார் : மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கப்படுவதால், கடலுார் மாவட்ட பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 117.39 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்வரத்து அதிகம் உள்ளதால் அதிகபட்ச கொள்ளளவான 120அடியை விரைவில் எட்டும். அதனால் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி முதல் 75 ஆயிரம் கன அடி வரை எந்நேரத்திலும்திறந்து விடப்படும். எனவே கடலுார் மாவட்டத்தில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர்வரத்து காரணமாக, நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். டார்ச் லைட், மருந்துகள்,பால், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால், மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரையில் நீர்நிலைக்கு அருகில் செல்வது, ஆற்றில்குளிப்பதை தவிர்க்க வேண்டும். இடிமின்னலுடன் கனமழை பெய்யும் போது திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள்மற்றும் உலோக கட்டமைப்பின் கீழ் நிற்பதையும் தவிர்க்க வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்குகொண்டு செல்ல வேண்டும்.

கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. இங்கு, கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04142 220700 என்ற எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து மக்கள்தகவல் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us