ADDED : ஜூன் 14, 2025 01:12 AM
கடலுார் : கடலுார் துறைமுகம் அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர், உப்பனாற்றில் தவறி விழுந்து இறந்தார்.
கடலுார், துறைமுகம் அடுத்த சோனங்குப்பத்தைச் சேர்ந்தவர் சைமன்,55; மீனவர். இவர் நேற்று காலை தனது படகை எடுத்துக்கொண்டு உப்பனாற்றில் மீன்பிடிக்கச் சென்றார். அப்போது, படகில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து இறந்தார். புகாரின் பேரில் கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.