ADDED : மார் 17, 2025 06:23 AM
விருத்தாசலம், : கம்மாபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் வயல்வெளி விழா நடந்தது.
பெரம்பலுார் மாவட்டம், தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள், விருத்தாசலம் வேளாண் அறிவியில் நிலையத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கம்மாபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் நேற்று நடந்த வயல்வெளி விழாவில் வேளாண் மாணவிகள் பங்கேற்றனர். விழாவில், வயல்வெளியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகள் விளக்கினர். இதில், வேளாண் அதிகாரிகள், விவசாயிகள், மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.