/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு முன் விவசாயிகள் திடீர் மறியல் விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு முன் விவசாயிகள் திடீர் மறியல்
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு முன் விவசாயிகள் திடீர் மறியல்
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு முன் விவசாயிகள் திடீர் மறியல்
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு முன் விவசாயிகள் திடீர் மறியல்
ADDED : ஜூன் 26, 2025 01:03 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் மார்க்கெட் கமிடியில், வேளாண் விளைபொருட்களை எடைபோடாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் நேற்றும் வழக்கம்போல், விவசாயிகள் நெல், எள், மக்காச்சோளம் உள்ளிட்ட விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். தினசரி காலை 7:00 மணிக்கு வியாபாரிகள் வந்து எடை போடுவது வழக்கம். ஆனால், நேற்று காலை 9:30 மணி வரை வியாபாரிகள், வேளாண் அதிகாரிகள் வராததால், விளைபொருட்களை எடைபோட முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், குறிப்பிட்ட காலத்தில் விவசாயிகள் விற்பனை செய்யும் வேளாண் விளைபொருட்களுக்கு பணம் போடாமல் வியாபாரிகள் இழுத்தடித்து வந்துள்ளனர். இதில், ஆத்திரமடைந்த விவசாயிகள், நேற்று காலை 9:45 மணியளவில் மார்க்கெட் கமிட்டி எதிரே விருத்தாசலம் - கடலுார் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், விருத்தாசலம் - கடலுார் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மேலும், இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.