/உள்ளூர் செய்திகள்/கடலூர்/என்.எல்.சி.,யை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்என்.எல்.சி.,யை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
என்.எல்.சி.,யை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
என்.எல்.சி.,யை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
என்.எல்.சி.,யை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 10, 2024 11:19 PM

விருத்தாசலம்: என்.எல்.சி., விரிவாக்கத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு சமமான இழப்பீடு, நிரந்தர வேலை மற்றும் கருணைத்தொகை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கம்மாபுரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம், சாத்தப்பாடி, ஊ.ஆதனுார் உள்ளிட கிராமங்களில் என்.எல்.சி., நிறுவனம், சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம், வீடுகளை கையகப்படுத்தியது.
இதில், கடந்த 2000ம் ஆண்டு முதல் தற்போது வரை என்.எல்.சி., நிர்வாகம் கையகப்படுத்திய நிலங்களுக்கு சமமான இழுப்பீடு, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கருணைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, என்.எல்.சி., நிர்வாகத்திற்கு நிலம் வீடு மனை கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நேற்று கம்மாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.