மரம் விழுந்து மாட்டு கொட்டகை சேதம்
மரம் விழுந்து மாட்டு கொட்டகை சேதம்
மரம் விழுந்து மாட்டு கொட்டகை சேதம்
ADDED : டிச 01, 2025 05:40 AM

கடலுார்: கடலுார் செம்மண்டலத்தில், தொடர்மழை காரணமாக வேப்பமரம் முறிந்து விழுந்தது.
'டிட்வா' புயல் காரணமாக கடலுாரில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் காலை கடலுார் செம்மண்டலம், சண்முகம் நகர் பகுதியில் இருந்த ஒரு வேப்பமரம், மழை காரணமாக முறிந்து அருகிலிருந்த மாட்டுக் கொட்டகையில் விழுந்தது.
அதில் கொட்டகையிலிருந்த மாடுகள் காயமடைந்தன. தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மாடுகளை பாதுகாப்பாக கொட்டகையிலிருந்து மீட்டனர்.


