ADDED : செப் 09, 2025 06:29 AM
புவனகிரி : புவனகிரி அருகே நஞ்சை நிலத்தை, போலி ஆவணம் தயாரித்து முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாற்றுத்திறனாளி கோரிக்கை மனு அளித்தார்.
இதுகுறித்து கலெக்டருக்கு, புவனகிரி, வாண்டையாங்குப்பம் கைகாட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாயவன் அளித்த மனு: சேத்தியாத்தோப்பு சார் பதிவாளர் அலுவலகம் பாக பிரிவினை இடத்தில், கடந்த 16 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். தமிழ்நாடு அரசு அறிவித்த குறுவை தொகுப்பு ஊக்கத் தொகையை அனுபவம் மற்றும் சாகுபடி செய்யும் புல எண்களை பயன்படுத்தி வாண்டையாங்குப்பம் கிராமத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.