/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கண் சிகிச்சை முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு கண் சிகிச்சை முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
கண் சிகிச்சை முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
கண் சிகிச்சை முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
கண் சிகிச்சை முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 08, 2025 03:00 AM

சிதம்பரம்: சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம், ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்தில் நடந்தது.
முகாமிற்கு சங்க தலைவர்இளஞ்செழியன் தலைமை தாங்கினார். செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். எம்.எல்.ஏ., பாண்டியன் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர்கள் சுனில்குமார், ஹரிணி, ஜித்தின், ஜெனியா, திருவேங்கடம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் 265 பயனாளிகள் சிகிச்சை பெற்றதில், 68 நோயாளிகள் கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொறியாளர் அரவிந்தன் இலவசக் கண் கண்ணாடிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அரிமா கமல் கிஷோர்,ராமகிருஷ்ணா பள்ளி தாளாளர்பாலசுப்பிரமணியன், கல்வியாளர் செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
வெங்கடேசன் நன்றி கூறினார்.