ADDED : மே 19, 2025 06:39 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லையில் அகழாய்வு பணி நடக்க உள்ள இடத்தை தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தன் ஆய்வு செய்தார்.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மணிக்கொல்லை கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு சார்பில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடலுார் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தன், நேற்று மணிக்கொல்லை பகுதியில் ஆர்.சி., உயர்நிலைப்பள்ளி அருகே, அகழாய்வு செய்ய உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.