ADDED : ஜன 15, 2024 06:31 AM
புவனகிரி: கீரப்பாளையம் அடுத்த வயலுார் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
ஊராட்சி துணைத் தலைவர் சந்திரசோலை வரவேற்றார். ஊராட்சித் தலைவர் கனகம்ராசு, பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.
வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் தங்கமுருகவேல் நன்றி கூறினார்.


