Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொறியியல் கட்-ஆப் வெளியீடு அரசு பள்ளி மாணவி சாதனை

பொறியியல் கட்-ஆப் வெளியீடு அரசு பள்ளி மாணவி சாதனை

பொறியியல் கட்-ஆப் வெளியீடு அரசு பள்ளி மாணவி சாதனை

பொறியியல் கட்-ஆப் வெளியீடு அரசு பள்ளி மாணவி சாதனை

ADDED : ஜூன் 28, 2025 07:02 AM


Google News
Latest Tamil News
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளி மாணவி, பொறியியல் படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் 200க்கு 200 பெற்று சாதனை படைத்தார்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு, பொதுத் தேர்வு எழுதிய மாணவி தரணி. இவர், நேற்று வெளியான பொறியியல் படிப்புக்கான கட்- ஆப் மதிப்பெண்ணில் 200க்கு 200 பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். மாணவிக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவி தரணி கூறுகையில், 'காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழக்கடம்பூர் சொந்த ஊர். கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் படித்தேன். தந்தை வேல்முருகன், தாய் சாந்தி மற்றும் சகோதரர், சகோதரி உள்ளனர்.

தந்தை வெளிநாட்டில் கொத்தனார். தந்தையின் கஷ்டத்தை அறிந்து, நல்ல முறையில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கடுமையாக உழைத்து, இயற்பியல் வேதியியில், கணிதம் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்தேன்.

பொறியியல் படிப்பில் தமிழகத்தில் நல்ல கல்லுாரியில் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்று தந்தைக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தாய் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரை கேட்டு படித்தேன்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு உண்டு என்பதை அறிந்து, நல்ல முறையில் படித்ததால், சாதனை செய்ய முடிந்தது. இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய வரமாக உள்ளது.

என்னைப் போன்ற கிராமப்புற மாணவர்கள் கடினமாக முயற்சி மேற்கொண்டு படித்தால் சாதனைகள் புரியலாம்' என்றார். வெளிநாட்டில் உள்ள தந்தை வேல்முருகன், கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிடம் மொபைல் போனில் வாழ்த்து தெரிவித்த அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us