மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
ADDED : ஜூலை 03, 2025 11:29 PM
விருத்தாசலம்: வீட்டு வேலைக்கு சென்ற எலக்ட்ரீஷியன் மின்சாரம் தாக்கி இறந்தார்.
கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுார் பழைய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம், 45; எலக்ட்ரீஷியன். இவர், நேற்று பகல் 12:30 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சேப்பெருமாள், 65, என்பவர் வீட்டு வேலைக்கு சென்றார். அப்போது, மின்சாரம் தாக்கி ராஜாராம் இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி மாலதி அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.