/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இ.கே.சுரேஷ் கல்வி குழும நிறுவனங்கள் ஆண்டு விழா இ.கே.சுரேஷ் கல்வி குழும நிறுவனங்கள் ஆண்டு விழா
இ.கே.சுரேஷ் கல்வி குழும நிறுவனங்கள் ஆண்டு விழா
இ.கே.சுரேஷ் கல்வி குழும நிறுவனங்கள் ஆண்டு விழா
இ.கே.சுரேஷ் கல்வி குழும நிறுவனங்கள் ஆண்டு விழா
ADDED : மார் 24, 2025 05:36 AM

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழும சி.எஸ்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, இந்துமதி சுரேஷ் கல்வியியல் கல்லுாரி, டாக்டர் இ.கே., சுரேஷ் ஹெல்த் சயின்ஸ், ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.சி., பள்ளி, எஸ்.ஆர்.கே., இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி., பள்ளி ஆகிய நிறுவனங்களில் ஆண்டு விழா, நடந்தது.
விருத்தாசலம் அடுத்த எருமனுார் சி.எஸ்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவிற்கு, கல்வி குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
கல்வி குழும செயலாளர் இந்துமதி சுரேஷ், முதன்மை நிர்வாக அலுவலர் அருண்குமார், பேராசிரியர் கவி பாண்டியன் முன்னிலை வகித்தனர். சி.எஸ்.எம்., கல்லுாரி முதல்வர் சின்னப் பொண்ணு வரவேற்றார்.
கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ரமேஷ், சக்திவேல், அப்துல், ஞானசுந்தரி, சுமதி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.
விழாவில், பிக்பாஸ் வெற்றியாளர் முத்துக்குமரன், நடிகர்கள் அமுதவாணன், பூவையார், பழனி பட்டாளம், சூப்பர் சிங்கர் பூஜா ஆகியோர் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது.
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் பூங்கோதை, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, நடிகர் ராஜா ஆகியோர் பரிசு வழங்கினர்.
கல்லுாரி துணை முதல்வர் ஜேசுதாஸ் நன்றி கூறினார்.