/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் தனி அதிகாரிகள் நியமித்து நடவடிக்கை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் தனி அதிகாரிகள் நியமித்து நடவடிக்கை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் தனி அதிகாரிகள் நியமித்து நடவடிக்கை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் தனி அதிகாரிகள் நியமித்து நடவடிக்கை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் தனி அதிகாரிகள் நியமித்து நடவடிக்கை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
ADDED : ஜன 07, 2024 04:53 AM
கடலுார்: கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு முன்னேற்றத்திற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
கடலுாரில் நேற்று மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
பள்ளி கல்வித் துறையில், எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டும் வகையில், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், ஹைதராபாத்தில் நடக்கும் தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பார்கள்.
அறிவியல் கண்காட்சி சமுதாயம் சார்ந்த, சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை கூறும் வகையிலும் உள்ளன.
அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்கு அமைச்சர்கள் நேரடியாக கேட்டறிந்து பாராட்டப்படுவதால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இந்த நிகழ்ச்சிகளை பள்ளி கல்வித்துறையின் மணற்கேணி என்ற ஆப் மற்றும் யூ டியூப்களில் பதிவேற்றம் செய்யப்படுவதால் தமிழக மாணவர்களின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் பார்க்க ஏதுவாக உள்ளன.
தமிழகத்தில் நாங்குனேரியில் ஏற்பட்ட ஜாதிய பாகுபாடு சர்ச்சை குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கமிட்டி அளிக்கும் அறிக்கை அடிப்படையில் ஜாதிய பாகுபாடு குறித்த திட்டங்கள் உருவாக்கப்படும்.
கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களை முன்னேற்ற, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இயக்குனர்கள், இணைஇயக்குனர்கள் நியமித்து கண்காணிக்கப்படுகிறது. கல்வித்துறை படிப்படியாக முன்னேற்றம் காணப்படும் என்றார்.
பேட்டியின்போது, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், எம்.எல்,ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன் உடன் இருந்தனர்.