ADDED : ஜன 03, 2024 12:36 AM
கடலுார் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடக்கும் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, லாட்டரி டிக்கெட் விற்பனை, மதுக்கடத்தல் போன்றவை மூலம், போலீசாருக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. இது தொடர்பாக ஏதேனும் புகாரும் வரக்கூடாது, ஆனால் மாமூலும் வரவேண்டும் என 'பாம்பும் சாகனும், தடியும் உடையக்கூடாது' என்கிற பாணியில், கடலுார் மாவட்ட போலீசார் இருந்து வருகின்றனர்.
தற்போது அதையும் மீறி, புகாரே வந்தால் கூட நடவடிக்கை எடுப்பதில்லை. காரணம், இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வர இருக்கிறது. அதையொட்டி இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் கண்டிப்பாக இருக்கும்.
நடவடிக்கை எடுத்தாலும் இல்லையென்றாலும் இடமாற்றம் என்பது நிச்சயம் உண்டு. பிறகு ஏன் அலட்டிக்கொள்வானேன் என, போலீஸ் அதிகாரிகள் கேஷ்வலாக இருந்து வருகின்றனர். இதனால் சட்ட விரோத செயல்கள் மீண்டும் அதிகரிக்க துவங்கிவிட்டது.