/உள்ளூர் செய்திகள்/கடலூர்/'வம்பை விலைக்கு வாங்காதீங்க' நகராட்சிகளுக்கு உத்தரவு?'வம்பை விலைக்கு வாங்காதீங்க' நகராட்சிகளுக்கு உத்தரவு?
'வம்பை விலைக்கு வாங்காதீங்க' நகராட்சிகளுக்கு உத்தரவு?
'வம்பை விலைக்கு வாங்காதீங்க' நகராட்சிகளுக்கு உத்தரவு?
'வம்பை விலைக்கு வாங்காதீங்க' நகராட்சிகளுக்கு உத்தரவு?
ADDED : ஜன 03, 2024 12:33 AM
கடலுார் மாவட்டத்தில் கடலுார் மாநகராட்சியும், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், வடலுார், திட்டக்குடி ஆகிய ஆறு நகராட்சிகளும் உள்ளன. நகராட்சிகளில் மாதந்தோறும் கூட்டங்களை நடத்தி, மக்களுக்கு தேவையானவற்றை திட்டமிட்டு, செயல்படுத்த வேண்டும். ஆனால் ஒரு சில நகராட்சிகளில் மாதாந்திர கூட்டங்களையே முறையாக நடத்துவதில்லை என கவுன்சிலர்கள் புலம்பி வருகின்றனர்.
மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கடைகோடி நகராட்சியில் ஆளும் கட்சி கவுன்சிலர்களே கேள்விகளை கேட்டு பிரச்னை எழுப்பினர். இதனால், மாதம் மாதம் கூட்டத்தை கூட்டி, 'வம்பை விலைக்கு வாங்காதீங்க' கமுக்கமா கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கி திட்டங்களை நிறைவேற்றிக்குங்க என மேலிடத்திலிருந்து வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாகவும், அதையே தாங்கள் கடைபிடிப்பதாகவும் வதந்தி பரப்பி வருகின்றனர்.
இதனால் வார்டுகளில் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாததால், கவுன்சிலர்களை பொதுமக்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கின்றனர்.