Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தே.மு.தி.க., மாநில மாநாடு வேப்பூரில் கொடியேற்றம்

தே.மு.தி.க., மாநில மாநாடு வேப்பூரில் கொடியேற்றம்

தே.மு.தி.க., மாநில மாநாடு வேப்பூரில் கொடியேற்றம்

தே.மு.தி.க., மாநில மாநாடு வேப்பூரில் கொடியேற்றம்

ADDED : செப் 15, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
வேப்பூர்: வேப்பூர் அருகே தே.மு.தி.க., மாநில மாநாடு நடக்க உள்ள இடத்தில் 75 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியேற்றப்பட்டது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தில் தே.மு.தி.க., மாநில மாநாடு வரும் 2026 ஜன., 9ம் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு, 150 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு இடம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், தே.மு.தி.க., கொடி நாளான நேற்று, மாநாடு நடக்க உள்ள இடத்தில், 75 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் கடலுார் சிவக்கொழுந்து, உமாநாத், அரியலுார் ஜெயவேல், கள்ளக்குறிச்சி கருணாகரன், திருவண்ணாமலை நேரு, நிர்வாகிகள் சந்திரசேகர், ராஜாராம், பாலு, ராஜ், தென்னவன், ராஜமாணிக்கம், குமரவேல், திருமால் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us