Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரத்தில் தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு

சிதம்பரத்தில் தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு

சிதம்பரத்தில் தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு

சிதம்பரத்தில் தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு

ADDED : செப் 16, 2025 06:39 AM


Google News
Latest Tamil News
சிதம்பரம் : சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டையில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா நடந்தது.

சிதம்பரம் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்' என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்றனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயயராகவன், பாலமுருகன், கவுன்சிலர்கள் அப்பு சந்திர சேகரன், மணிகண்டன் பங்கேற்றனர்.

அண்ணாமலை நகரில் பேரூராட்சி தலைவர் பழனி தலைமையில் ஒன்றிய செயலாளர் சங்கர் பங்கேற்றார்.

பரங்கிப்பேட்டை நகர தி.மு.க., சார்பில் பேரூராட்சி துணை சேர்மன் முகமது யூனுஸ், மாவட்ட பிரதிநிதி சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆனந்தன், முன்னாள் துணை சேர்மன் செழியன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அரவிந்தன், நகர அவைத் தலைவர் தங்கவேல், முன்னாள் நகர செயலாளர்கள் முனவர் உசேன், பாண்டியன் பங்கேற்றனர்.

புவனகிரி அழிச்சிக்குடி ஊராட்சி நாலாந்தெத்து கிராமத்தில் ஆத்ம திட்ட இயக்குனர் சாரங்கபாணி தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் சிவச்சிதம்பரம், மணிவண்ணன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் இளையராஜா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி கலியமூர்த்தி பங்கேற்றார்.

இளைஞர் அணி துணை அமைப்பாளர் கவுதமன், மணிவேல், கிருஷ்ணகுமார் பங்கேற்றனர்.

மணவெளி மத்திய ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் மாறன் வரவேற்றார். மாவட்ட பொறியாளர் அணி தலைவர் ராமன், ஒன்றிய தொழில் நுட்ட அணி பொறுப்பாளர் மணி முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் விக்ரமன் உறுதிமொழி வாசித்தார்.

அன்பழகன், பெருமாள், தமிழரசன், தியாகராஜன், ராஜா, சிவா, பாண்டுரங்கன் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us