/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க., - அ.தி.மு.க., மரியாதை அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க., - அ.தி.மு.க., மரியாதை
அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க., - அ.தி.மு.க., மரியாதை
அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க., - அ.தி.மு.க., மரியாதை
அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க., - அ.தி.மு.க., மரியாதை
ADDED : செப் 16, 2025 07:27 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் மற்றும் வேப்பூரில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா நடந்தது.
விருத்தாசலம்: மேற்கு மாவட்ட தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங் கினார்.
நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், விளையாட்டு மேம்பாட்டு அணி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் கனககோவிந்தசாமி, தொகுதி மேற்பார்வையாளர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார். பின், 'தமிழ்நாட்டை தலைகுணிய விட மாட்டோம்' என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நகர பொருளாளர் மணிகண்டன், இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், முன்னாள் பொதுக்குழு குரு சரஸ்வதி பங்கேற்றனர்.
அ.தி.மு.க.,: நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், துணை செயலாளர் மணிவண்ணன், நகர தலைவர் தங்கராசு, கலை, இலக்கிய அணி ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், பச்சமுத்து, ரகுராமன், வழக்கறிஞரணி விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார்.
வேப்பூர்: நல்லுாரில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கி, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். நிர்வாகிகள் வெங்கடாசலம், தனசேகரன், அன்பழகன், பாபு, சூர்யா பங்கேற்றனர்.
சிறுபாக்கம்: கழுதுாரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மங்களூர் முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர் பங்கேற்றனர்.