/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வாக்காளர்களை அலசி, ஆராயும் தி.மு.க., அ.தி.மு.க.,வாக்காளர்களை அலசி, ஆராயும் தி.மு.க., அ.தி.மு.க.,
வாக்காளர்களை அலசி, ஆராயும் தி.மு.க., அ.தி.மு.க.,
வாக்காளர்களை அலசி, ஆராயும் தி.மு.க., அ.தி.மு.க.,
வாக்காளர்களை அலசி, ஆராயும் தி.மு.க., அ.தி.மு.க.,
ADDED : ஜன 31, 2024 02:20 AM
சிதம்பரத்தில் தேர்தல் வேலைய துவங்கிட்டாங்க...
லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க., புதுச்சேரி உட்பட 40 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றிபெற கட்சி தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அ.தி.மு.க., வும் தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் வியூகம் வகுத்து காய்நகர்த்தி வருகிறது. பா.ஜ., காங்., மற்றும் பா.ம.க., வி.சி., உள்ளிட்ட பிற கட்சிகளும், தங்களின் கட்சியினரை தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறது.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள், கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதே சமயத்தில் தங்களின் நிர்வாகிகளின் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பணியையும் முடுக்கிவிட்டுள்ளன.
அந்த வகையில், சிதம்பரம் சட்டசபை தொகுதியில், ஆளுங்கட்சியான தி.மு.க., 260 பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை நியமித்துள்ளனர். ஒவ்வொரு பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு கீழ், 100 ஓட்டுக்கு, ஒரு உறுப்பினர் என பூத்திற்கு 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, கட்சி தலைமை முதற்கட்ட 'கவனிப்பு' செய்துள்ளதால், உற்சாகமடைந்து, பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சிதம்பரம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று குடும்பத்தில் எத்தனை நபர்கள் உள்ளனர். அதில் வாக்காளர்கள் எத்தனை பேர், அவர்களுக்கு ஓட்டு எங்கு உள்ளது. வாக்காளர்கள் சொந்த ஊரில் வசிக்கிறார்களா அல்லது வெளியூரில் உள்ளனரா எனவும், வாக்காளர்கள் சார்ந்த கட்சி, அவர்கள் யாருக்கு ஓட்டளிக்கும் மனநிலையில் உள்ளனர் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
கட்சி தலைமையில் உத்தரவுபடி, அ.தி.மு.க., தி.மு.க., இரு கட்சிகளுமே, சிதம்பரம் சட்டசபை தொகுதியில் வீடு, வீடாக விபரங்களை சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வீடு, வீடாக சென்று போட்டிப்போட்டு விபரங்களை சேகரித்து வருவதால் சிதம்பரம் சட்டசபை தொகுதி, பரபரப்பாகி உள்ளது.