ADDED : ஜன 13, 2024 04:05 AM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் வட்டார கல்வி அலுவலகம் முன், தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) சார்பில், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமையாசிரியர் முருகன் தலைமை தாங்கினார். மாநில முன் உரிமையை வலியுறுத்தும் அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைந்திட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தாமோதரன், சுப்பரமணி, மணிமாறன், சம்பத்குமார், வெங்கட்ராமன், ராஜ்குமார், குலோத்துங்கன், தங்கராஜ், உதயராஜ், சமரசம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தலைமை ஆசிரியர் கயல்விழி நன்றி கூறினார்.